தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து 1- 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையை மருத்துவ வல்லுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் கருத்துக்களை கருத்தில் கொண்டு வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லால் அகர்வால் கொரோனா இரண்டாவது இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அக்டோபர்,நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் பண்டிகை காலங்கள் வருவதால் மக்கள் கொரோனா நடவடிக்கையை பின்பற்றி இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதனால் தொடக்கப் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் பள்ளி கல்வி துறை, தொடக்கப்பள்ளி குறித்து மறு ஆலோசனை கிடையாது என்றும் திட்டமிட்டபடி கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.