தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தற்போது நான்கு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு நீலகிரி உள்ளது.
மேலும் சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்தால் தமிழ்நாட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்திய நிலக்கரி நிறுவனம் குறைந்த அளவே நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டிற்கு தினமும் 62000 டன் நிலக்கரி அனுப்பி வைக்கப்படும் நிலையில் அதில் 60% நிலக்கரி மட்டும் தான் அனுப்பி வைக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து நிலவை தட்டுப்பாடு ஏற்பட்டால் தமிழக மக்கள் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்படுவார்கள். இதனால் தமிழக முதல்வர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசின் நிலகிரி துறை அமைச்சருடன் செல்போனில் பேசி தமிழ் நாட்டிற்கு தேவையான நிலக்கரியை அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கூறி உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.