Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சோதனை… 4 கிலோ வெள்ளி, 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்… பறக்கும் படையினர் அதிரடி…!!!

தமிழகதத்தில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது உரிய ஆவணம் இல்லாமல் ஒரு லட்சம் பணம் மற்றும் 4 கிலோ வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ளது . அதனால் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள் . இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள சீர்காழிஎன்ற பகுதியில் அபிஷேக் என்பவர் நகைக்கடைஒன்றை  வைத்துள்ளார். அவர் 4 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பாலிஷ் போடுவதற்க்கு சென்னைக்கு காரில் கொண்டு சென்றுள்ளர் .

அப்பொழுது சீர்காழி புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுப்பட்டிருந்தபொழுது ,அந்த வழியாக அபிஷேக் கார் வந்துள்ளது.அந்தக் காரை சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை சோதனையிட்டனர். அதில் நாலு கிலோ வெள்ளி கொலுசுகளையும்  மற்றும் 90,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர் .அதனை  அத்தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலக தாசில்தார் ஹரிதரனிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும்  கரூர் அருகே வதியம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரால் மணச்சநல்லூரை சேர்ந்த சுகாதாரன் என்பவரின் மினி லாரியில் உரிய ஆவணம் இல்லாததால் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டள்ளது.

Categories

Tech |