Categories
மாநில செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில்…. என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை….!!!!

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட்டு உறவினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் சென்னையில் மட்டும் அம்பத்தூர், நெற்குன்றம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 3 இடங்களில் மாவோயிஸ்ட்டு உறவினர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து 2 என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிவகங்கை மாவட்டத்தில் சிங்காரம் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் புளியங்குளம் பகுதியில் மாவோயிஸ்ட் உறவினர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதில் டாக்டர் தினேஷ் டேனிஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வீடுகளில் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள அண்ணா நகர் மற்றும் பண்ணைபுரம் ஆகிய இடங்களில் வேல்முருகன், ஈஸ்வரன், முத்துச்செல்வன் மற்றும் பழனிவேல் ஆகியோர்களின் வீடுகளில் 2 மணி நேரம் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Categories

Tech |