Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் இனி…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்களில் விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கக்கூடிய வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது குறித்த உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |