இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இதுவரை 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பல இடங்களில் அதிக மையங்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 7 மெகா தடுப்பூசி முகாமில் 1,51,13,852 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை 8 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதில் 50,000 முகாம்கள் அமைக்கப்பட்டடு இரண்டாவது தவணை தடுப்பூசி 13 லட்சம் பேருக்கு மற்றும் முதல் தவணை தடுப்பூசி 48 பேருக்கும் செலுத்தப்பட உள்ளது. மேலும் தொடர்ந்து 8 வாரமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றாலும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது என்பதால் வீடுகளுக்கு தேடிச்சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.