தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.
தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம் மற்றும் திருவள்ளுவர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களை வருகின்ற 8 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் கடலூர்,சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 7 ஆம் தேதி வரை கனமழை பெய்ய கூடும் என்று அறிவித்துள்ளது.