உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற ஓட்டுநர்களும், தமிழர்களும் அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு வரமுடியாமல், அங்கேயே வெளியேற முடியாமலும் பரிதவித்து வருகின்றனர்.
இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களை விட, அதிகம் பாதிக்க படுபவர்கள் கூலி வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு சென்ற அடித்தட்டு மக்கள் தான். இந்த ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்ய தவறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.