Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி ,கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 12, சென்டிமீட்டர் அளவில்,தேவலாவில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |