கன்னட இயக்குனர் தயால் பத்மநாபன் இயக்கத்தில் “கொன்றால் பாவம்” என்ற படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனரான தயாள் பத்மநாபன் தனது இருபதாவது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றார். இவர் கன்னட மொழியில் 19 படங்களை வெற்றி படமாக இயக்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்துள்ளார். இதனை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமாரை கதாநாயகியாக வைத்து “கொன்றால் பாவம்” என்ற தலைப்பில் படம் எடுக்கவுள்ளார்.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கவுள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டில் கன்னடத்தில் இயக்கிய “ஆ காராள ராத்திரி” என்ற வெற்றி திரைப்படத்தை தற்போது தமிழில் இயக்கவுள்ளார். இந்தத் திரைப்படம் குறித்து இயக்குனர் தாயள் பத்மநாபன் கூறியதாவது, “இந்த திரைப்படம் தமிழுக்கு பொருந்தக்கூடிய அம்சங்களை கொண்டதாகவும், கன்னடத்தில் கிடைத்த வெற்றி தமிழிலும் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.