Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி….. நடிகை காஜலின் கோஸ்டி பட டீசர்…. வைரலாக்கும் ரசிகாஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நான் மகான் அல்ல படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்த வருகிறார்.‌ இந்நிலையில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் கோஸ்டி.

இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, ஊர்வசி, மனோபாலா, ஆடுகளம் நரேன், சத்தியன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, லிவின்ஸ்டன், மதன் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை ராதிகா சரத்குமார் முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். SEED PICTURES நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கோஸ்டி திரைப்படத்திற்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கோஸ்டி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Categories

Tech |