தமிழகத்தில் நிலஅளவர், வரைவாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டுகள் தயாராகி உள்ளது என்று அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் கட்டுப்பாடு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர், வரைவாளர், தமிழக நகர் ஊரமைப்பு துறையில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை தேர்வாணைய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.