Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை சந்திப்பேன்”…. அதிரடி காட்டிய ஓபிஎஸ்….!!!!

அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் முன்னால் அரசு கொறடா துறை கோவிந்தராஜன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்‌ நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. எங்களை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுகவின் தலைமையில் பிரச்சினை உள்ளது போல் மாயம் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக அண்ணன் தம்பி தான். ஆனால் இரண்டு கட்சிகளும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறது. நாங்கள் எம்ஜிஆர் உருவாக்கிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுக அவர்களின் பாதையில் பயணிக்கிறார்கள். அதிமுக கூட்டணி அமைத்தால் சேர தாயார் என்ற டிடிவி தினகரன் கருத்தை வரவேற்கிறேன். மேலும் தமிழகத்திற்கு வரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |