டீவீட்டரின் ஹேஷ்டேக் பட்டியலில் தமிழ் சினிமா திரைப்படம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது .
ஹேஷ்டேக்கின் 12 ஆவது பிறந்த தினமான நேற்று , பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டிவீட்டர் வெளியிட்டது . இந்த பட்டியலில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்துள்ளது .
இந்நிலையில் , தமிழ் சினிமாவின் திரைப்படமான விஸ்வாசம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இந்த திரைப்படம் பற்றிய கருத்துகள் ட்விட்டரில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. மேலும் , அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய ட்விட்களும் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது .
In India, here were the top 5, most used hashtags from Jan 1 – Jun 30.
1. #Viswasam
2. #LokSabhaElections2019
3. #CWC19
4. #Maharshi
5. #NewProfilePic #HashtagDay#हैशटैगदिवस
அதில் இந்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #LokSabhaElections2019 இரண்டாவது இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது . மூன்றாவது இடத்தில் #CWC19 இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றிய இந்த ஹேஷ்டேக்கினை ட்விட்டர் வாசிகள் அதிகம் பயன்படுத்தினர். இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா திரைப்படமான மகரிஷி #Maharshi எனும் ஹேஷ்டேக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பட்டியலில் நான்கவது இடம்பிடித்துள்ளது.
Twitter India
✔@TwitterIndia
Today is Hashtag Day! Tweet with the hashtags, #HashtagDay and #हैशटैगदिवस to see our special emoji appear.
Tell us, which Twitter Hashtag is your favourite? https://twitter.com/chrismessina/status/223115412 …
Chris Messina
✔@chrismessina
how do you feel about using # (pound) for groups. As in #barcamp [msg]?
ஐந்தாவது இடத்தில் #NewProfilePic எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றது. இதனை புதிய புகைப்படத்தை ப்ரோஃபைல் படமாக தேர்வு செய்வோர் பொதுவாக பயன்படுத்தியிருக்கின்றனர். ஹேஷ்டேக் எனும் அம்சம் ட்விட்டரில் 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதை கொண்டு ஒருபிரிவு சார்ந்த விவரங்களை தனியாக பிரிக்க முடியும்.