Categories
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டை விட… 22.4% தொழில் உற்பத்தி உயர்வு… தேசிய புள்ளியில் அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!

இந்திய உற்பத்தி துறை வளர்ச்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 22.4% வளர்ச்சி அடைந்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று இருந்த நிலையில் நாட்டின் தொழில் உற்பத்தியில் சுமார் 18.7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தொழில் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த ஆண்டு மார்ச் இறுதியில் தேசிய புள்ளியியல் அலுவலகம் தொழில் உற்பத்தி குறியீடு புள்ளிவிவரத்தில் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி துறை, மின்சாரம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி 22.4%மாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் தொழில் உற்பத்தியில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாக தேசிய புள்ளி விவரத்தின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |