Categories
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு… 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு… ரிசர்வ் வங்கி தகவல்..!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு புதிய 500 ரூபாயை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஒரு வருடத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் இந்தியாவில் 29.7 சதவீதம் கள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் 25.4 சதவீதமும், 2020 21 நிதியாண்டில் 31.1 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 11.7 சதவீதம் அதிகமாகும்.

Categories

Tech |