சீனாவில் 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண் குழந்தையை தனது மகனுக்கு திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவுவெடுத்துள்ளனர் .
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த இருவருக்கு திருமணம் நடை பெற இருந்த நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கு மிகுந்த ஆவலுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தபோது மணமகனின் தாயார் மணப்பெண்ணின் கையில் ஏதோவொரு அடையாளம் இருப்பதை பார்த்துள்ளார். அந்த பிறப்பு அடையாளத்தைப் பார்த்து அதிர்ந்துபோன மணமகனின் தாயார் கதறி அழுதுள்ளார்.
அதன்பிறகு மணமகனின் தாயாரிடம் விசாரித்த போது 20 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன என் குழந்தையின் கையிலும் இதே போன்ற பிறப்பு அடையாளம் இருக்கும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மணமகளின் பெற்றோரிடம் கேட்டபோது எங்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தினால் சாலையோரத்தில் கிடந்த இந்த பெண் குழந்தையை எடுத்து வளர்த்ததாக மகனின் தாயாரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் ஆனந்தக் கண்ணீர் விட்டு மணமகனின் தாயாரான தன் தாயை கட்டி அணைத்து அழுதுள்ளார். இந்நிலையில் இருவரும் அண்ணன் தங்கை என்று திருமணம் நடைபெறாது என்று நினைத்து அனைவரும் வருந்திய போது மணமகனின் தாயார் எங்கள் பெண் குழந்தை காணாமல் போன காரணத்தினால் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தி வந்ததாக தெரிவித்தார் .
ஆகையால் இருவரும் ஒரு வயிற்றில் பிறந்த குழந்தைகள் இல்லை எனவே இருவரின் திருமணத்தில் எந்தவித இடையூறும் இல்லை எனக் கூறி திருமணத்தை நடத்தியுள்ளனர். மேலும் 20 வருடங்களுக்கு முன் காணாமல் போன தன் பெண்பிள்ளையை கண்டு தாய் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றார்.