Categories
தேசிய செய்திகள்

வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கணும்….! காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொதுச் செயலாளரான எம்.எல்.ஏ அதிதி சிங் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்…

உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ வான அதிதி சிங் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யோகி ஆதித்யநாத்தை சந்தித்ததினால், அவரை அப்பதவியில் இருந்து நீக்கக்கோரி சபாநாயகரிடம் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது அவர் மீது சர்சை வெடித்து காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில நாட்களுக்கு முன் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர ஆயிரம் பேருந்துகள் தயாராக உள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார். மேலும் ஆயிரம் பேருந்துகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு உ.பி அரசு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்க்கு காங்கிரஸ் கட்சி அனுப்பிய பேருந்து குறித்தே கடுமையான விமர்சனம் செய்தார் அதிதி சிங். இது உ.பி மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதால் அவரின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

அதிதி சிங், பேரழிவின் போது இது போன்ற கீழ்த்தரமான அரசியல் தேவையா? கட்சி ஆயிரம் பேருந்துகளில் பாதிக்குமேல் போலி பதிவு எண்களை கொண்டவை, 98 வாகனங்கள் ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஆம்புலன்ஸ்கள், சரியான ஆவணங்கள் இல்லாதவை 68 வாகனங்கள். மேலும் 297 பேருந்துகள் சேதம் அடைந்தவை. உங்களிடம் பேருந்துகள் இருந்தால் பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு ஏன் அனுப்பவில்லை? கோடா பகுதியில் சிக்கிய மாணவர்களை அழைத்து வர யோகி ஆதித்யநாத் ஒரு நாள் இரவு முழுவதும் முயற்சி செய்து பேருந்துகளை அனுப்பி வைத்தார். இதனை ராஜஸ்தான் முதலமைச்சர் பாராட்டியுள்ளார்”, என்று அவர் குறிப்பிட்டு தன் சொந்த கட்சியையே அவர் விமர்சித்துள்ளார்.

 

Categories

Tech |