Categories
உலக செய்திகள் கொரோனா

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த டிரம்ப்

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிபர் டிரம்ப்க்கும், அவரது மனைவி மெலோணியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கடந்த ஒன்றாம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த ட்ரம்ப் நான்கு நாட்களுக்குப் பிறகு கடந்த 5ம் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து தான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ட்ரம்புக்கு அளிக்கப்பட்டு வந்து சிகிச்சை முடிவடைந்ததாகவும், பத்தாம் தேதி முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்ளி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்குப் பின் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து தனது ஆதரவாளர்களை நோக்கி பேசினார். அப்போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |