Categories
உலக செய்திகள்

தனக்கென சொந்த சமூக வலைத்தளம்… கெத்து காட்டும் டிரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களில் தனக்கென சொந்த கணக்கு ஒன்றை உருவாக்குவதாக அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சிறியவர்  முதல் பெரியவர் வரை சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் உலக தலைவர்களில் ஒருவரான அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ட்ரம்ப்  ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பெருமளவில் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய ட்ரம்ப்  இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சமூகவலைதளங்களில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனது கருத்தை பதிவிட்டார்.

மேலும் அதிர்ச்சி ஏற்படுத்த  கூடிய அளவிற்கு ட்ரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறை செய்துள்ளனர். தேர்தல் முறைகேடு தொடர்பாக சமூக வலைதளங்களில் நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருக்கும் போதும் பதிவுகளை ட்ரம்ப் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்ற அனைத்து சமூக வலைதளம் நிறுவனங்களும்  ட்ரம்ப்  தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதற்காக டிரம்பின் அனைத்து கணக்குகளையும் நிரந்தரமாக முடக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்பின் ஆலோசகர் ஜாசேன் மில்லர் மிகவிரைவில் தனக்கென ஒரு சொந்தமான சமூக தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என கூறியுள்ளார்.

ட்ரம்ப்  2 அல்லது 3 மாதங்களில் தனக்கென சொந்த வலைதளத்தை உருவாக்குவதில் மிகுந்த தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அதற்காக எண்ணற்ற நிறுவனங்கள் அவரை சந்தித்து பேசுவதாகவும் கூறினார். ட்ரம்ப்  உருவாக இருக்கும் இந்த மிகப்பெரிய வலைதளம் பல்லாயிரக்கணக்கான மக்களை  ஈர்க்கும் சக்தி கொண்டது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |