நடிகர் அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்த மருத்துவ பலகையை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சில நாட்களில் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யாராய்க்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 27ஆம் தேதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் வீடு திரும்பினர். நடிகர் அமிதாபச்சனும் ஆகஸ்ட் 2ம் தேதி வீடு திரும்பினார். தற்போது நடிகர் அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந் நிலையில் மருத்துவமனையில் தனது அறையில் வைக்கப்பட்டிருந்த உடல்நிலை நிலவரம் குறித்த மருத்துவ பலகையை அபிஷேகிப்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “மருத்துவமனையில் சேர்ந்து 26 நாட்கள் ஆகிறது. தற்போது வீடு திரும்பும் சூழல் இல்லை ஆனால் என்னை நானே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு தனது உடல்நிலை தேறிவிட்டேன். நான் வழக்கமாக உண்ணும் உணவானது தற்போதைய உணவு அட்டவணையில் இடம்பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பு பலகையை பதிவிட்ட அபிஷேக் பச்சன் தன்னைத்தானே ஊக்கப்படுத்தும் விதமாக ” எழுந்து வா பச்சன் உன்னால் முடியும்” என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது சக நண்பர்களும் ரசிகர்களும் அவர் விரைவில் வீடு திரும்ப ஊக்கப்படுத்தி வருகின்றனர்.