Categories
உலக செய்திகள்

நிறைமாத கர்ப்பிணிப்பெண் பலி…. கைக்குழந்தையுடன் நிற்கும் கணவன்…. வெளிவந்த புகைப்படங்கள்….!!

நிறைமாத கர்ப்பிணிப்பெண் விபத்தில் பலியான சோகத்தில் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வரும் கணவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் Yesenia Lisette மற்றும் James Alvarez என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் கடந்த ஆண்டு Yesenia கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான Yeseniaவுடன் James சாலையில் நடைபயிற்சி சென்றுள்ளார்.  அப்பொழுது திடீரென சாலையை கடந்த ஜீப் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறி Yesenia மீது மோதியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி Yesenia உயிரிழந்துள்ளார். இருப்பினும் குழந்தையை மட்டும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர். இதற்கிடையில் Yesenia மீது கார் மோதிய Courtney Pandolfi என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் பல்வேறு போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் ஏற்கனவே அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அதிலும் அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் James தன் மனைவி கர்ப்பமாக இருந்த பொழுது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றே தற்போழுது தன் மகளுடன் அதே நாளில் அதே இடத்திற்கு சென்று எடுத்துள்ளார். ஏனெனில் அவரது மனைவியின் இறந்தநாளும் குழந்தையின் பிறந்தநாளும் ஒன்று. எனவே அவர் மனைவியின் நினைவாகவும் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவும் இவ்வாறு புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனை பார்க்கும் பொழுது கண்ணின் ஓரம் கண்ணீர் சுரக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |