கனடாவில் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி நிவேதிதா தனது வீட்டின் ரகசியங்களை வெளியிட்டு இருக்கின்றார்.
கன்னட நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பிரபல பாடகர் சந்தன் ஷெட்டியும், பின்னணி பாடகி நிவேதிதா கவுடாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கொரோனா கால கட்டத்தில் நடந்தது. இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றார்கள்.
இதனை அடுத்து டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிவேதிதா தனது வீட்டின் ரகசியங்களை வெளியிட்டு இருக்கின்றார். இது குறித்து நிவேதிதா கூறியதாவது, “நான் வீட்டில் சமையல் செய்வது இல்லை. எங்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் எனது வீட்டில் நாங்கள் முதன்முதலாக வாங்கிய கியாஸ் சிலிண்டர் காலியாகவில்லை. அந்த சிலிண்டர் இன்னும் பல மாதங்களுக்கு உபயோகமாகும்” என்று அவர் கூறியுள்ளார் . இதன்மூலம் நிவேதிதா வீட்டில் சமையல் செய்வதே இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.