Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் களைக்கட்டிய ஆடிப்பெருக்கு விழா… காவிரி தாய் வீட்டிற்கு வருகிறாள்… மக்கள் மகிழ்ச்சி…!!

காவிரி தாயை போற்றும் ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் காவிரிக் கரையோரங்களில் உற்சாகம் கரை புரளும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஆடிப்பெருக்கை காவிரி கரை மற்றும் நீர்நிலைகளில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஆடிப்பெருக்கை இந்த ஆண்டு வீடுகளிலேயே கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர். தஞ்சை கீழே வாசலில் தாலி சரடு, மஞ்சள், குங்குமம், பூ, பழம், பொரி கடலை, பனை ஓலை போன்றவற்றை வாங்குவதற்காக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஆண்டு காவிரித்தாய் தங்களது வீடுகளுக்கு வரவிருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஆடிப்பெருக்கில் காவிரி போல மகிழ்ச்சியும் வளமும் தங்களது வாழ்விலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நாளில் புதுமண தம்பதிகள் மங்கல நாணை மாற்றி புதிதாக அணிந்துகொள்வது வழக்கம் ஆடிப்பெருக்கில் காவிரி கரையோரம் கொண்டாட்டமும் களைகட்டும். ஆனால் கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு வீடுகளிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.

Categories

Tech |