ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அங்கு பெண்களுக்கென பல கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து ஆப்கனை சேர்ந்த 32 கால்பந்து ஆட்டக்காரர்கள் இங்கிலாந்தின் மூலம் குடும்பத்தோடு பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி ஆப்கன் நாட்டிலுள்ள பெண்களுக்கென பலவித கட்டுப்பாடுகளையும் தலிபான்கள் விதித்துள்ளார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் ஆப்கனை சேர்ந்த ஜூனியர் கால்பந்து வீராங்கனைகள் 32 பேரை அந் நாட்டை கைப்பற்றிய தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து கால்பந்து நிறுவனம் பாகிஸ்தான் நாட்டிற்கு அவர்களை குடும்பத்தோடு நாடுகடத்த உதவி செய்துள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் அரசாங்கமும் ஆப்கன் நாட்டைச்சேர்ந்த கால்பந்து வீராங்கனைகளுக்கு உடனடியாக விசாவை வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஆகையினால் ஆப்கன் நாட்டை சேர்ந்த 32 ஜூனியர் கால்பந்து வீராங்கனைகள் குடும்பத்தோடு பாகிஸ்தான் நாட்டிற்கு பத்திரமாக அடைக்கலம் புகுந்துள்ளார்கள்.