கடுமையான மது போதையிலிருந்த பெண் ஒருவர் அவருடைய ஜோடியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக அவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் Britanny Stone என்னும் 28 வயதுடைய பெண்ணொருவர் அடுக்குமாடி குடியிருப்பு அவருடைய ஜோடியுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஜோடி இருவருக்குமிடையே திடீரென ஒருநாள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த பிரிட்டானி ஸ்டோன் சரியான மது போதையில் இருந்தபோது தன்னுடைய ஜோடியை கத்தியை கொண்டு தலையில் குத்தி காயமடைய செய்துள்ளார். அதன்பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட போது மூளையில் கத்திக்குத்து ஏற்பட்டதால் அவருடைய கண்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பிரிட்டானியை கைது செய்து வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் பிரிட்டானி ஸ்டோனின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.