Categories
உலக செய்திகள்

தலிபான்களின் கொடூர தண்டனை…. ஆக்ரோஷமாக பேட்டியளித்த நபர்….. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

ஆப்கானிஸ்தானிலுள்ள எவராவது தப்பு செய்தால் அவர்களுக்கு தலிபான்கள் கொடுக்கும் தண்டனை தொடர்பாக சிறிது காலத்திற்கு முன்பாக தலிபான்களின் அமைப்பை நிறுவிய நபரொருவர் கொடுத்த பேட்டிக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள எவரேனும் தப்பு செய்தால் அவர்களுக்கு தலிபான்கள் கொடுக்கும் தண்டனை தொடர்பாக அண்மையில் தலிபான்களின் அமைப்பை நிறுவிய முல்லா நூறுதீன் என்பவர் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் தாங்கள் தப்பு செய்தவர்களுக்கு நிறைவேற்றும் தண்டனை குறித்து உலக நாடுகள் தங்களை கேள்வி கேட்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் எந்த நாட்டினுடைய சட்டத்தையும் கேள்வி கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி தலிபான்களாகிய தங்களுக்கு எவரும் சட்டத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தர தேவையில்லை என்று மிகவும் ஆக்ரோஷத்தோடு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தலிபான்களின் அமைப்பை நிறுவிய முல்லாவின் இந்த பேட்டிக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதாவது தலிபான்களின் கொடூர சட்டம் திட்டவட்டமாக அவர்கள் மனித உரிமைகளை மீறுவது போன்று அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |