தண்டவாளத்தில் கிடந்த சடலம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமால் நகர் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இவருக்கு மேகலா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாந்தகுமார் திடீரென ரயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சாந்தகுமாரின் உடலில் ரயிலில் அடிப்பட்டது போல் காயங்கள் எதுவும் இல்லை என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆதலால் காவல்துறையினர் அவர்களிடம் சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் சாந்தகுமார் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு காரணம் ஏதும் இருக்கிறதா என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.