தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது பெண் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புளியக்குடி வடக்குதோப்பு தெருவில் சித்திரவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர் காதுகேளாத மாற்றுத்திறனாளி ஆவர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி அம்மாபேட்டை ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது காரைக்கால் செல்லும் ரயில் தமிழ்ச்செல்வி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே இருப்புப் பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், தனிப்பிரிவு தலைமை காவலர் சுரேஷ், ஏட்டு சரவணசெல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தமிழ்ச்செல்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளத்தில் தமிழ்ச்செல்வி நடந்து சென்று சென்றபோது ரயில் ஓட்டுநர் ஒலி எழுப்பியதாக தெரிகிறது. ஆனால் தமிழ்ச்செல்விக்கு காதுகேளாத காரணத்தினால் அவர் மீது ரயில் மோதி இறந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.