ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் தண்டவாள பகுதியில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அவர் மீது அவ்வழியாக வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால் இறந்த வாலிபர் யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.