ரயில்வே தண்டவாளத்தில் முதியவர் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம்-திருப்பதி ரயில் மார்க்கத்தில் ரயில் நிலையத்திற்கு இடையே ஜெய்பீம் பகுதியில் தண்டவாளம் அருகில் 65 வயதுடைய முதியவர் சடலமாக கிடந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.