தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாராயணமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து நாராயணமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அருகில் இருந்தவர்கள் நாராயணமூர்த்தியை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாராயணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.