குடும்பத் தகராறில் தந்தையை வெட்டி கொலை மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கண்ணநல்லூர் தாமரைக் குளம் பகுதியில் சமுத்திரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கணேசன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமுத்திரத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சமுத்திரம் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்த கணேசன் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த அரிவாளால் தந்தை சமுத்திரத்தின் தலையில் பலமாக வெட்டியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த சமுத்திரம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாடத்தி கதறி துடித்தார். இதனையடுத்து கணேசனும் தந்தையை கொலை செய்தது கூட தெரியாமல் ‘அப்பா அப்பா’ என புலம்பியவாறு இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமுத்திரத்தின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்துள்ளனர்.