Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தங்க கவசத்துடன்… காட்சியளித்த மூலவர் குருபகவான்…. திரண்டு வந்த பக்தர்கள்….!!

கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின் முதல் வியாழக்கிழமை நேற்று குருபகவான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவிலில் நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலான இங்கு குருவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் போன்ற சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

அதன்பின் அலங்காரம் நிறைவுபெற்று தீபாராதனை காட்டப்பட்டு மூலவர் குருபகவான் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆகவே கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு முதல் வியாழக்கிழமை என்பதனால் பக்தர்கள் ஆர்வத்துடன் திரண்டு குருபகவான் கோவிலுக்கு வந்துள்ளனர்.

Categories

Tech |