Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாசல் தெளித்து கொண்டிருந்த பெண்…. முகவரி கேட்பது போல நகை பறித்த நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் தொடர்ந்து வழிப்பறி நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் காவல்துறையினர் அவினாசி-திருப்பூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பூர் ராயபுரம் பகுதியில் வசிக்கும் ஷாஜஹான், சிங்காநல்லூர் மூகாம்பிகை நகர் பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் அவினாசி மங்கலம் சாலை பகுதியில் வீட்டின் முன்பு வாசல் தெளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல வந்து 2 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதேபோன்று மங்கலம், பல்லடம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு 7 1/2 பவுன் தங்கநகைகள், வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |