Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தங்க சுரங்கத்தில் இருக்கும் பள்ளங்கள்….. மீட்கப்பட்ட எலும்பு கூடு…. வனத்துறையினரின் தகவல்…!!

தங்கச் சுரங்க பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த காட்டு யானையின் எலும்புகூடு மீட்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா நாடுகாணி இடையே ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க சுரங்கம் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தச் சுரங்கத்தில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அதன் தாயுடன் சேர்த்து விட்டனர்.

இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனத்துறையினர் பள்ளத்தில் புதைந்த நிலையில் தந்தத்துடன் கூடிய காட்டு யானையின் எலும்புக்கூடு கிடந்ததை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதைந்து கிடந்த எலும்பு கூட்டை மீட்டனர். இதுகுறித்து வன சரகர் பிரசாத் கூறும்போது, பள்ளத்தில் 18 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னரே இந்த சம்பவம் நடந்திருக்கலாம். எனவே மருத்துவக் குழுவினரின் ஆய்வுக்கு பிறகே விவரங்கள் தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |