Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நாங்க எதிர்பார்த்த நகைகள் இங்கே இல்ல” உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை வாங்குவது போல் நடித்து தங்க வளையலை திருடிச் சென்ற 2 பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் செய்யது சித்திக் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு வசதிபடைத்தவர்கள் போன்ற தோற்றத்தில் 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த நகைகளை பார்த்து அதற்குரிய விலை விவரம் கேட்டுள்ளனர். அதன்பின் இருவரும் தாங்கள் எதிர்பார்த்த நகைகள் இங்கே இல்லை என கூறி விட்டு நகை எதுவும் வாங்காமல் திரும்பி சென்று விட்டனர். இதனையடுத்து கடை ஊழியர்கள் நகைகளை சரிபார்த்த போது 16 கிராம் எடையிலான 2 தங்க வளையல்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து கடை ஊழியர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் நகைகளை திருடிச் சென்றது கடை ஊழியர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பல இடங்களில் அந்த குறிப்பிட்ட 2 பெண்களையும் தேடி பார்த்தனர். ஆனால் அதற்குள் அந்த பெண்கள் மாயமானார்கள். இந்நிலையில் திருட்டு போன நகையின் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கடையின் உரிமையாளர் செய்யது சித்திக் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த 2 பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |