தங்கையின் மாமியாரை அடித்து கொலை செய்த அண்ணன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்பின் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட காரணத்தினால் இது பற்றி ரமேஷின் தாயார் புஷ்பா மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். அப்போது மருமகள் மற்றும் மாமியாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் சதீஷ்குமார் தங்கச்சியை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது ரேவதி மற்றும் புஷ்பா இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை கண்ட அண்ணன் சதீஷ்குமார் தனது தங்கையிடம் எதற்காக தகராறு செய்கிறீர்கள் என கேட்டு புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் கோபமடைந்த சதீஷ்குமார் அங்கு கிடந்த ஒரு மர சட்டத்தை எடுத்து புஷ்பாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த புஷ்பாவை அவரின் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் குமார் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.