நகைச்சுவை நடிகர் தங்கதுரை ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் தங்கதுரை சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பழைய ஜோக் தங்கதுரை என மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இவர் தற்போது சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இவர் குத்துச் சண்டை போட்டியை தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை கவர்ந்தது.
இதனையடுத்து, இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தங்கதுரை நேற்று படப்பிடிப்புத் தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.