தமிழகத்தில் காவிரி ஆற்றில் மருந்து பொருட்கள் கலந்து ஆற்றில் மாசு கலந்துள்ளதாக சென்னை ஐஐடி குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹீ, ஐ.ஐ.டி. மற்றும் பேராசிரியர் லிஜி பிலிப் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பொதுமக்கள் டாக்டர்கள் அறிவுரை படி தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தேவையற்ற மருந்துகளை குப்பையில் கொட்டாமல் மருந்தகங்கள் வாயிலாக மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பி முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் இதற்காக தனி மருந்து பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மை திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.