Categories
உலக செய்திகள்

இனி கட்டாய தனிமைப்படுத்துதல் கிடையாது…. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்…. தகவல் வெளியிட்ட இங்கிலாந்து….!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்திற்குள் தாராளமாக நுழையலாம் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள்.

இதனையடுத்து இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட இந்தியர்கள் தாராளமாக இங்கிலாந்திற்குள் நுழையலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி இங்கிலாந்திற்குள் நுழையும் கோவாக்சின் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இந்தியர்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |