பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பால் இங்கிலாந்து பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இங்கிலாந்த் நாடு புதுப்பிக்கப்பட்ட விமான பயண பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுக்கல் நாட்டை பச்சை பட்டியலிலிருந்து நீக்கிய இங்கிலாந்து அரசாங்கம், அதனை அம்பர் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இங்கிலாந்து வாசிகள் எவரும் இனி போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்லக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேசமயம் போர்ச்சிக்கலில் இருந்து இங்கிலாந்திற்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது. இந்த விதி ஜூன் 8 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதனால் போர்ச்சுகலில் இருந்து ஜூன் 7ஆம் தேதிக்குள் நாடு திரும்புவதற்காக இங்கிலாந்து வாசிகள் போர்ச்சுக்கல் விமானநிலையத்தில் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
அதேசமயம் போர்ச்சிக்கலில் இருந்து இங்கிலாந்திற்கு செல்லும் விமானம் மிகவும் குறைவான இருக்கைகளை கொண்டதாக இருக்கிறது. இதனால் பயணிகள் அடுத்த விமானத்தை மாற்ற நினைத்தால் அதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று போர்ச்சுக்கல் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.