கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்துதலுக்கான காலத்தை ஜப்பான் அரசு குறைந்துள்ளது.
ஜப்பானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்தியா போன்ற கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 40 நாடுகளிலிருந்து வருபவர்களும் அரசு தங்க வைக்கும் இடத்தில் இருக்கும் மூன்று நாட்கள் உட்பட மொத்தம் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனிமைப்படுத்துதலுக்கான நாட்களை ஜப்பான் அரசு சற்று குறைத்துள்ளது. இது குறித்து ஜப்பானின் தலைமை அமைச்சகத்தின் செயலாளரான கத்சுனோபு கட்டோ தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்தும் காலமானது 14 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.