Categories
உலக செய்திகள்

சூப்பர் நியூஸ்….!! வெண்டைக்காயை பயன்படுத்தி தண்ணீரை சுத்தம் செய்யலாமா….? அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் தகவல்….!!!

குடிநீரில் உள்ள நுண் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குவதற்கு வெண்டைக்காயில் உள்ள வேதிப்பொட்கள் உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு, குடிநீர்.  இவற்றில் உணவு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. இந்த சூழலில் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் மிக அவதிக்குல்லாகி கிடைக்கும் தண்ணீரை குடித்து செல்வம் நிலையை நாம் பார்க்கிறோம். குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துவதாக இருப்பினும் அதன் தூய்மையே நமது நலனுக்கு அவசியம்.

இந்த நிலையில் நகர நிர்வாகம் வழங்கக்கூடிய தண்ணீரை சுத்தம் செய்வதற்கு குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் அதிக அளவில் ரசாயன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அவைகள் சேர்ந்து கட்டிகளாக உருமாற்றம் அடைகிறது. அதில் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நூல்  பிளாஸ்டிக் பொருட்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த கட்டிகளை நீக்கும் போது நுண் பிளாஸ்டிக் பொருட்கள் நீரிலேயே தங்கிவிடுகின்றது.

மேலும் தண்ணீரை தூய்மைப்படுத்த சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்களின் பாலிஅக்ரைலமைடு போன்ற வேதிப் பொருட்கள் சில சந்தர்ப்பங்களில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டார்லெட்டன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராஜி சீனிவாசன் தலைமையிலான குழு ஒன்று குடிநீரை தூய்மைப் படுத்தும் பணி குறித்து  ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வில் நாம்  தினசரி உபயோகிக்கும் காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். அதில் உள்ள பாலிசாக்கரைடு என்ற வேதிப்பொருள் வெங்காயத்துடன் சேர்த்து உபயோகப்படுத்தும் போது கடல் நீரில் உள்ள நூல் பிளாஸ்டிக்குகளை நீக்குவதில் சிறந்ததாக செயல்படுவது தெரிய வந்துள்ளது.

அதேபோல் புளியில் இருந்து வரும் பாலிசாக்கரைடு கூட தண்ணீரில் உள்ள நுண் பிளாஸ்டிக்களை முற்றிலும் நீக்குகிறது. இந்த நிலையில் பாலிசாக்கரைடு சதவிதம் காய்கறி உள்ள வேதிப்பொருட்கள் எங்கிருந்து நீர் கிடைத்தாலும் பாலிஅக்ரைலமைடுவை விட நன்கு செயல்பட்டு வருவது தெரியவந்தது.

இந்த வேதிப்பொருட்களை பயன்படுத்தி குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் எந்தவித மாற்றமும் இன்றி பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து கடல் , நிலத்தடி போன்ற இடங்களில் கிடைக்கும் நீரிலிருந்து நூல் பிளாஸ்டிக் நீக்குவதற்கு காய்கறி சார்ந்த வேதிப்பொருட்களின் சதவிதங்கள் குறித்து ஆய்வுக்குழு தனது ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |