Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தட்டுப்பாடு வந்துட்டு…. அவதிப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சவார்த்தை….!!

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு ராமையா காலனி பகுதியில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தபகுதி பொதுமக்களின் தேவைக்காக 5 குடிநீர் குழாய்கள் மூலம் உப்புத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு தனியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல்அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த ராமையா காலனி பொதுமக்கள் மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதன்பின் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பின் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

Categories

Tech |