Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சகோதரிகள்…. திடீரென நடந்த சம்பவம்…. கடிதத்தில் உருக்கம்…!!

சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்பட்டறை காந்திநகர் பகுதியில் சந்திரன் என்பவரின் மனைவியான லட்சுமி தனது தங்கை சரஸ்வதியுடன் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான சரஸ்வதிக்கு திருமணம் ஆகாத நிலையில் ஒரு ஜவுளி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். சந்திரனின் இறப்பிற்கு பிறகு அக்காள் தங்கை இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி உடல்நிலை பாதிப்படுவதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருவரும் நீண்ட நாட்களாக தங்களை கவனித்துக் கொள்ள யாருமில்லை என்ற மன விரக்தியில் இருந்துள்ளனர்.இந்நிலையில் வீட்டில் இருந்த அவர்கள் இருவரும் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வீராணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அதன்பின் காவல்துறையினர் அங்கு கிடந்த ஒரு கடிதத்தை எடுத்து பார்த்தபோது அதில் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தங்களால் சிகிச்சை பெற்றும் குணம் அடைய முடியவில்லை. எனவே வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதியுள்ளனர். மேலும் அதில் எங்கள் இறுதி சடங்கிற்காக பணம் வைத்திருக்கிறோம் அதனை கொண்டு தங்களின் இறுதிச் சடங்கை செய்யுமாறு எழுதியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |