Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தனியாக தவித்த பெண்… சமூகநல துறையினரின் செயலால்…. கணவரிடம் ஒப்படைப்பு…!!!

ஒரிசாவை சேர்ந்த பெண் மற்றும் அவரின் குழந்தைகளை மாவட்ட கலெக்டர்  அவரின் கணவரிடம் ஒப்படைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரிசாவை சேர்ந்த கர்ப்பிணியான பிளாச்சி என்ற பெண்ணை ஒருபெண் குழந்தையுடன் சுயநினைவு இல்லாத நிலையில் சமூகநலத் துறையினர் மீட்டுள்ளனர். அந்தப் பெண்ணை சமூகநலத் துறையினர் மீண்டான்பட்டியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து அவருக்கு சிகிச்சையும்,  மனநல மருத்துவர்களால் ஆலோசனைகள் அளித்து வந்துள்ளனர்.  இதனையடுத்து பிளாச்சியின் குழந்தையான அங்கீதாவை அடைக்கலாபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிளாச்சிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் பிளாச்சிக்கு சுய நினைவு திரும்பியதால் அவரின் கணவரின் பெயர் உசோகொய் என்பதும் ஒரிசா மாநிலத்தில் உள்ள போலாங்கியில் வசித்து வருகின்றார் என்று விபரங்களை அனைத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒரிசா மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவலை தெரிவித்து அவரின் கணவரை தூத்துக்குடிக்கு அழைத்துக்கொண்டு வரும்படி தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஒரிசா மாநிலத்தில் காவல்துறையினர் பிளாச்சியின் கணவரான உசோகொய் என்பவரை அழைத்துக்கொண்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஒரிசா மாநிலத்தின் காவல் துறையினரின் முன்னிலையில் பிளாச்சி மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் மாவட்ட கலெக்டர் செல்வராஜ் என்பவர் அவரின் கணவரான உசோகொய்யிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி என பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |