தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் சுகன்யா நகர் பகுதியில் அருணச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருணாச்சலம் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் ரசூல் முத்தையா என்பவர் அருணாச்சலம் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அருணாச்சலம் சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரசூல் முத்தையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.