Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பல்வேறு தனியார் நிறுவனங்கள்…. அரிய வாய்ப்பு…. அதிகாரிகள் தகவல்….!!

தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திருமண மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாகதீனதயாள் உபாதியாய ஊரக கவுசல்ய யோஜனா திட்டத்தின் மூலமாக வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் செய்வாய் கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற 18 வயது நிரம்பிய பெண் மற்றும் ஆண் என இருபாலர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இந்த வேலைவாய்ப்பு முகாம் படிக்காத மற்றும் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, இன்ஜினியரிங் படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் ஆகியவை முடித்தவர்கள் கல்வி சான்று, ஆதார், ஜாதி சான்று, குடும்ப அட்டை நகல் மற்றும் தங்களின் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |