சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறைப்படுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜய்யை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.